உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே பசித்தோர் முகம் பார் பரம்பொருள் அருள்கிட்டும் என்ற வாக்கிற்கேற்ப தானத்தில் சிறந்த அன்னதானத்திற்கென மாண்புமிகு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நன்கொடையாளர்கள் பங்கேற்புடன் கூடிய அன்னதானத் திட்டம் இத்திருக்கோயிலில் 23.03.2002- ம் தேதி முதல் துவங்கப்பட்டு சீரும் சிறப்புடன் அனைவராலும் பாராட்டப்படும் வண்ணம் நடைபெற்று வருகிறது .அன்னதானத்திற்கு பணம் செலுத்துவோருக்கு 80 வரிவிலக்கு இத்திருக்கோயிலிலிருந்து அளிக்கப்படும்