அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலின் மூலதெய்வமான கருமாரியம்மன் கிழக்குப் பார்த்து அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முன்மண்டபம் திருச்சுற்று வளாகம் ஆகிய அனைத்தும், தற்காலக் கட்டுமானங்களாகும். முதல் திருச்சுற்று தெய்வங்களாகத் திருக்கோயிலின் முன்புறம், கிழக்குத் திசை நோக்கி வலம்புரி விநாயகர் சன்னதியும், வடகிழக்கில் சீனிவாசப்பெருமாள் சன்னதியும், தென் கிழக்கில் நவக்கிரக சன்னதியும், வடமேற்கில் வேற்கண்ணியம்மன் சன்னதியும், வடக்கில் தென்திசை நோக்கி முருகன் சன்னதியும், மரச்சிலையம்மன் சன்னதியும் உள்ளன. இரண்டாம் திருச்சுற்று தெய்வங்களாகத், தெற்கில் தென்திசை கடவுளான தட்சிணாமூர்த்தி சன்னதியும், தென் மேற்கில் அங்காள பரமேஸ்வரி சன்னதியும், கிழக்குத் திசை நோக்கி பிரத்தியங்கரா தேவி சன்னதியும், ஏழு அம்மன் சன்னதியும்,வள்ளி தெய்வானையுடன்முருகன் சன்னதியும், வடக்குத் திசை நோக்கி துர்க்கை...