Screen Reader Access     A-AA+
அருள்மிகு தேவிகருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு - 600077, திருவள்ளூர் .
Arulmigu Devi Karumariamman Temple, Thiruverkadu - 600077, Tiruvallur District [TM001646]
×
Temple History

தல வரலாறு

தொண்டை மண்டலத்தில் காடு என விகுதியுடன் முடியும் தலங்களில் சிறப்புமிக்க தலம் திருவேற்காடு. தொண்டை மண்டலத்தில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் திருவேற்காடு 23வது தலமாகும். நாயன்மார்களில் மூர்க்க நாயனார் அவதரித்த ஊர் திருவேற்காடு என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். வெள்வேல் மரங்கள் மிகுந்த பகுதி என்பதால் இப்பெயர் பெற்றது. இவ்வூர் சென்னைக்கு மேற்குத் திசையில் 18 கி.மீ தொலைவில் உள்ளது. திருவேற்காடு சங்ககாலத்தில் மிகச்சிறந்த வணிக நகரமாக இருந்துள்ளது என்பதை இங்குத் தொல்லியல்துறையினரால் நடத்தப்பட்ட அகழாய்வுகள் தெரிவிக்கின்றன. அம்போரா ஜாடிகள் எனப்படும் உரோமாபுரி மதுக்குடுவைகள் அமைப்பில் உள்ளூர் மக்களால் செய்யப்பட்ட குடுவைகள் இவ்வகழாய்வில் கிடைத்துள்ளதால் இவ்வூரின் தொன்மை உறுதிப்படுத்தப்படுகிறது. இவ்வூரில் அமைந்துள்ள தூங்கானை மாடக்கோயிலான பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் திருக்கோயில் கல்வெட்டுகளில் மிகுந்து பேசப்படுகிறது....